தமிழரின் இன்றையை நிலை, வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கூறும் நுால். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ செய்ய வேண்டியவை குறித்து விளக்கியுள்ளது. மொத்தம், 40 தலைப்புகளில் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
இன்றைய காலத்தில் பணம் எல்லாவற்றையும் விட பெரிதாக தோன்றுகிறது. ஆனால், அன்பு மட்டுமே மேலானது என கூறப்பட்டுள்ளது. புத்தர், காந்திஜி வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது.
நேர்மையே எப்போதும் வாழ்க்கைக்கு உதவும் எனக் காட்டுகிறது. வாசிக்கும் பழக்கத்தை தமிழர்கள் மறந்து வருவதாகவும் நுாலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் வழிகாட்டுகிறது. நேர்மையற்றவர்களால் அலுவலகங்களில் நடக்கும் தில்லுமுல்லு, கண்ணியமற்ற செயல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
– முகில்குமரன்