பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறுகதை பாத்திரங்களில், பெண்கள் நிலை குறித்து ஆராய்ந்து கருத்து கூறியுள்ள நுால்.
குடும்ப வாழ்வில், விளிம்பு நிலையில், நடுத்தர பணக்கார தன்மையுடன், கட்டுப்பாடுடன் வாழுவோர், கட்டுப்பாட்டைக் கடந்தவர்கள், படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், விழிப்புணர்வு மிக்கவர்கள், மரபு வழிபட்டவர்கள் என, 12 வகைமையாக பெண்களை தனித்தன்மையுடன் விளக்குகிறது.
பெண்கள் எதிர்கொண்ட பாலுணர்வு சிக்கல், விடுதலை, மனிதநேயம், உளவியல் நோக்கு, சமுதாய பார்வையில் ஆராய்ந்துள்ளது. சமத்துவம், கற்பு வரையறையில் மாற்றம், சொத்துரிமை பற்றிய கருத்துகளும் கவனிக்க வைக்கின்றன. பெண் கதாபாத்திரங்களின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு