இலங்கையில் அரசாட்சி செய்த மாவீரன் நரசிம்மவர்மன் பற்றியும், வாதாபி போர் பற்றியும் உண்மையும் புனைவும் கலந்து விவரிக்கும் சரித்திர நாவல்.
நாவலில் உலா வரும் கதாபாத்திரங்கள் வெகு சீக்கிரம் மனதோடு ஒன்றிப் போய் விடுகின்றன. வர்ணனைகளுடன் கூடிய சம்பவங்களும், வசீகரமான நடையும் சுவாரசியமான மர்ம நாவல் போல் விறுவிறுப்பை கூட்டுகிறது.
நாவல் முழுக்க அரச குடும்பத்து திருமணங்களின் பின்புலமும், ஒற்றர்களின் பாத்திரங்களும், போர்க்களங்களின் சித்தரிப்பும், பூகோள அமைப்பும் கண் முன்னே தத்ரூபமாக நிழலாடுகின்றன. கதாபாத்திரங்களின் உருவாக்கங்களும், உரையாடல்களும் தனி அழகுடன் இருக்கின்றன. சரித்திர கதைகளை விரும்பும் பிரியர்களுக்கு விருப்பமான நுால்.
-– ஊஞ்சல் பிரபு