ஹிந்து மதம், மனிதர்களுக்கு வழங்கியுள்ள போதனைகளை அனுபவ அடிப்படையில் உணர்த்தும் நுால். ஆன்மிக பயணத்தை புராண மரபு உரையாடல்களாக திரட்டித் தரப்பட்டுள்ளது.
ராமாயணப் போரில் ராவணன் – லட்சுமணன் இடையே நடந்த உரையாடல் துவங்கி, சுகப்பிரம்மம் – சூரிய பகவான் வரை, 28 அத்தியாயங்களில் ஆன்மிக கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. புராண கதை மரபை உரையாடலாக மாற்றி அறியத் தருகிறது.
தர்ம போதனைகளை அனுபவ உண்மைகளாக வெளிப்படுத்துகிறது. புராண கதைகள் கற்பனை உரையாடல் வழியாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் படத்துடன் தரப்பட்டுள்ளது.
இந்தியாவின் உயர்ந்த ஆன்மிக மரபு செல்வத்தை புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள புத்தகம்.
– விநா