அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரை பகுதியில் குடியேறி வாழும் நேபாளி இனத்தவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால்.
இந்தியாவை தாய் மண்ணாக பாவித்துள்ளதை மிகத் தெளிவாக படம் பிடிக்கிறது. நேபாளி மக்களின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்களை துல்லியமாக காட்சிப்படுத்துகிறது. படைக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள், இந்திய தேசம் மீதான அபிமானத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.
கதையின் மையக்கரு, இந்திய மண்ணை பற்றி படர்ந்து படிப்பினை தரும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நின்றது என பல்வேறு நிகழ்வுகளை களத்தில் உள்ளடக்கிஉள்ளது. ஒரு வரலாற்றை புனைவு வடிவில் முன்வைத்துள்ள நாவல்.
– மதி