வால்மீகி – கம்பன் ஒப்பீட்டில் பால காண்டம் பற்றி பேசியுள்ள நுால். அயோத்தியின் அழகு, வளமை துவங்கி, பால பருவத்தில் ராமபிரான் செய்த அற்புதமான விளையாடல்களையும், தம்பிகளுடன் ஒற்றுமையாய் வாழ்ந்ததையும் அழகாகச் சொல்லியுள்ளார்.
கோசலை, கைகேயி, சுமித்திரை எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற குழப்பத்திற்கு, காளிதாசனை துணைக்கு அழைத்து ரகு வம்சத்தில் தெளிவாகச் சொல்லியிருப்பதை குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற புதிய தகவல்களெல்லாம் ஆர்வத்தை வெகுவாகத் துாண்டுகின்றன. ராமனுடன் சீதைக்கு திருமணம் நடக்க, உண்மையின் உறைவிடமான அரிச்சந்திரன் ஒரு காரணமாக இருந்தார் என்ற தகவல் உள்ளது. வித்தியாசமான தகவல்களை உள்ளடக்கிய நுால்.
– தி.செல்லப்பா