சித்தர் மற்றும் அமானுஷ்யம் கலந்த குடும்ப பாங்கான நாவல். மர்மச் செய்திகளோடு ஆவலைத் துாண்டும் விதமாக உள்ளது.
மருத்துவர் மற்றும் எழுத்தாளர் நற்குணங்களுடன் வளர்க்கப்பட்ட பேரழகி. கை நிறைய சம்பாதிக்கிறாள். பொறுமை சகிப்புத்தன்மையுடன் விளங்குகிறாள். புகுந்த வீட்டில் இழைக்கப்படும் அத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொள்கிறாள்.
கற்புக்கே களங்கம் வரும் போதும் கொதித்து எழவில்லை. பதிலாகக் கொதிப்பது யார், நள்ளிரவில் மன்றாடும் ஆத்மா போன்றவற்றுக்கு விடை தரும் நுால்.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்