சமூக நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் சிறுகதை தொகுப்பு நுால்.
பிணவறை சடலத்தை காளி அம்மனாக கற்பனை செய்து எழுதிய, ‘பிரம்மசாமுண்டீஸ்வரி’ கதை, புதிய சிந்தனையின் தாக்கம். இஸ்லாமிய குடும்ப பழக்க வழக்கங்கள் அடுத்த தலைமுறை ஏற்றுக்கொள்ளும் விதத்தை, ‘ஒத்திகைக்கான இடம்’ கதை பகிர்கிறது.
மரத்தை நேசிக்கும் பெண்ணின் மன உரையாடல்களை, ‘தாவரங்களுடன் உரையாடுபவள்’ கதை மனதை நெருட வைக்கிறது. வரி செலுத்தியும், சாலை, சுகாதார வசதிகள் கிடைக்காத அவலத்தை, ‘சாமி போட்ட பணம்’ கதையில் அரசு நிர்வாகத்தை சாடுகிறது. ஒவ்வொன்றும் புதிய கதைக்களம், உளவியல் ரீதியான பார்வை, வட்டார வழக்குடன் படைக்கப்பட்டுள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்