சோழ மன்னர் வரலாற்று பின்புலத்தில் படைக்கப்பட்டுள்ள நாவல். ஓயாத போரில் உழன்று, எல்லைத் தாண்டுவதில்லை என தியாகம் செய்த மன்னன் கதையை எடுத்துரைக்கிறது.
மன்னனின் கடமைகளில் ஒன்று போர் தொடுப்பதும், எதிர்கொள்வதும் ஆகும். இனி போர் செய்வதில்லை என, குலோத்துங்க சோழன் வெளியிட்ட அறிவிப்பே கதையின் மையம். சோழ வரலாற்று செய்திகளை பின்புலமாக கொண்டு அமைந்துள்ளது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோவில் காட்சியும், அமைப்பும் உள்ளபடியே கூறப்பட்டுள்ளது. ‘எதிரிநாடு போர் தொடுத்தால் சமாதானம் பேசுவோம்; அதை ஏற்காவிட்டால்
எல்லைக்குள் இருந்தே தாக்குவோம்’ என்ற உத்தரவை ஏற்காத தளபதியின் வசனம் சிந்திக்க வைக்கிறது. எளிய சொற்களும், இனிய நடையும் அமைந்த நாவல்.
– புலவர் ரா.நாராயணன்