ஆரம்பகால தமிழ் திரைப்படங்களில் இருந்து பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றின் பின்னணியில் அமைந்த கதைக்களம், கவிஞர், இசையமைப்பாளர் கைவண்ணம், இயக்குனரின் காட்சி அமைப்புத்திறன் என நயம்பட உரைக்கும் நுால்.
கவிநயம், கருத்துச் செறிவு, காட்சிக்கேற்ற சொல்லாட்சி அழகுற விளக்கப்பட்டுள்ளன. திரைப்பாடல்கள் சாமான்ய மனிதர் வாழ்வில் ஏற்படுத்திய சிந்தனைகளையும், வாழ்க்கை முறைகளையும் முன்வைக்கிறது. பாடல் இடம்பெற்ற படத்தின் கதைக் களத்தை விவரித்துள்ளது.
இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் பெயர்கள் தந்திருப்பது சிறப்பு. கற்பனை கதைகளில் இடம் பெற்ற பாடல்கள் நேர்த்தியாக இடம்பெற்றுள்ளதை இலக்கிய நயத்துடன் விவரிக்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு