உழவுத் தொழில் மேன்மையை உணர்த்தும் வகையிலான கம்பரின் எழுபது பாடல்களுக்கு உரையாக அமைந்துள்ள அற்புத நுால். உழவுத் தொழில் நிலை, சோழவள நாட்டை வளப்படுத்திய காவிரியின் பாங்கு, அதன் இன்றைய இழிநிலையுடன் நுட்பமாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
உழவுத் தொழிலுக்கு உரிய சொற்களான பொலி கோல், பகடு பூட்டுதல், அரி சூடு, விரைக் கோட்டை, நுகத்தடி, ஊற்றாணி, பூட்டாங் கயிறு, தாற்றுக் கோல் போன்றவற்றுக்கு அழகுற பொருள் தரப்பட்டுள்ளது.
கவியின் உச்சம் தொட்ட கம்பன், படைத்து உழவுத் தொழில் மேன்மையைப் பறைசாற்றும் நுாலை, உலகறிய வைக்கும் மேன்மையான உரை நுால்.
– புலவர் சு.மதியழகன்