வாழ்க்கையில் இனிப்பான சம்பவங்களை விட கசப்பான நிகழ்வுகளே அதிகம். கசப்புகள் நேரும் போது, அவற்றை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற யதார்த்த நிலையை விளக்கும் நுால்.
பெரியவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினருக்கும் பயன் தரும் வகையில், தீர்வுகள் புராணங்கள் வாயிலாகச் சொல்லப்பட்டுள்ளன. பிரச்னைகள் யுகத்துக்கு தகுந்தவாறு புதிது புதிதாக முளைக்கும். அவற்றை பழமை மூலம் தீர்த்து வைப்பது, ஒரு வகை மருத்துவம் என்று கூட சொல்லலாம். இதை, இன்றைய இளைய தலைமுறைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்களை சீர்படுத்த வந்த நன்னுால்.
– தி.செல்லப்பா