கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா... சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது யாராவது பேசுவாங்களான்னு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும் தானே... அதைத் தான் சிவா செய்து கொண்டிருக்கிறான்.
வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி குண்டடிபட்டு கிடக்கும் போதும், பழைய அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால் அந்த காதல் தானே பக்தி. இதுவும் ஒருவகையில் ஆத்திகம் பேசும் அன்பு தான். இன்னும் கதைசொல்லியை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு கதை சொல்லியின் கதையை படிக்க ஆரம்பிக்கலாம்.
– எம்.எம்.ஜெ.,