பண்டைய கைரேகை கலையை ஆராயும் புத்தகம். ஒருவரின் வாழ்க்கையில் கடந்த கால, நிகழ்கால மற்றும் சாத்தியமான எதிர்கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழ்கிறது. எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கைரேகை பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில் உள்ளது. இந்த கலையை பயிற்சி செய்வது மற்றும் அனுபவத்தின் மூலம் சிறப்படையலாம் என வலியுறுத்துகிறது. ரேகைப் பகுப்பாய்வைக் கற்றுக் கொடுத்து, புரிதலை மேம்படுத்துகிறது.
ஒருவரது வாழ்க்கையில் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை கைரேகை வழியாக எவ்வாறு கணிக்க முடியும் என்பதை விவாதிக்கிறது. இதை புரிந்துகொள்வதால், எதிர்காலத்திற்கு சிறப்பாக திட்டமிடலாம். கைரேகை கலையில் ஆர்வமுள்ளோருக்கு சுவாரசியம் தரும் நுால்.
– -வி.விஷ்வா