இந்த தொகுப்பில் ஆறு கதைகள் இருக்கின்றன. வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டவை.
கணவன் ஆசையை பூர்த்தி செய்ய மகளை விதவையாக்கிய தாய்; வெறுப்பு மற்றும் பரவலான பழிச்சொல்லுக்கு உள்ளாகி தவித்த ஓவியக் கலைஞன்; சகோதரி வஞ்சகத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண், அந்த வஞ்சகத்தை செய்த பின் வருந்தி பாவமன்னிப்பு கோரும் சகோதரி போன்ற கதாபாத்திரங்கள் உடையது.
தாழ்வு மனப்பான்மை, உடல் ஊனம், அழகு, அறிவுத்திறன் பற்றிய சுய மதிப்பீடுகள் காரணமாக வரும் அழுத்தம், தொழில், உத்தியோகம், காதல் இவற்றில் தோல்வி, நிறைவேறாத எதிர்பார்ப்புகள் மனச்சிதறலுக்கு காரணமாவதை சொல்கிறது. புதுமையான, வித்தியாசமான படைப்பு.
–- இளங்கோவன்