முருகன் பெருமைகளை சிறப்பாக எடுத்துச் சொல்லும் நுால். எளிய நடையில் அமைந்துள்ளது. எல்லாரும் பாராயணம் செய்ய உகந்தது. திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொரு உறுப்பாக காக்க வேண்டும் என்ற வழிபாட்டு வேண்டுகோளை சொல்கிறது. மந்திரத்தை உச்சரிப்பது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.
கந்தன் என்ற சொல்லிற்கு பற்றுக் கோடானவன், பகைவர்களை வற்றச் செய்பவன் என்று பொருள் சொல்கிறது. கந்தர் சஷ்டி கவசத்தை எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. சஷ்டி விரத முறை பற்றி விரிவான விளக்கம் தருகிறது. கவசத்திற்கு விரிவான விளக்க உரை தந்து உள்ளது. அறுபடை வீடுகளும் இடம் பெற்றுள்ளன.
– புலவர் ரா.நாராயணன்