தீவிர இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். எழுத்தாளர்களையும், படைப்பையும் அவதானித்து கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.
தமிழில் நவீன இலக்கியத்தின் போக்கு குறித்து விமர்சன ரீதியாக எழுதப்பட்டுள்ளது. எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் எண்ணியதை இயல்பாக விவரிக்கிறது. மனித மாண்பை பிரதிபலிக்காத இலக்கியங்களுக்கு பரிசு கொடுத்து கவுரவிப்பதை கடுமையாக சாடுகிறது.
தமிழில் வெளிவந்த முக்கிய இலக்கியப் படைப்புகளை பற்றி வெளிப்படையாக சிந்தனையை முன்வைக்கிறது. இலக்கியப் பணியின் அடிநாதமாக ஒலிக்க வேண்டிய விஷயங்களை சுட்டிக்காட்டுகிறது. தமிழில் மேன்மையான இலக்கியம் மலர வேண்டும் என்ற கவலையை வெளிப்படுத்தும் விமர்சன நுால்.
– ராம்