திரைப்பட விழாக்களை மையமாகக் கொண்ட நாவல். கோவா, திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் சென்று வந்த அனுபவத்தில் எழுதப்பட்டுள்ளது.
சாதாரண மனிதன் தேடலுடன் சென்றால், மாறுபட்ட பார்வையுடன் திரும்ப முடியும் என்பதை வலியுறுத்து கிறது. தீவிர முயற்சிகள், கஷ்டங்களை கூறும்போது, நாமும் அனுபவித்த உணர்வை ஏற்படுத்துகிறது. திரைப்பட விழா கலாசாரம், மொழி, உணவு, புரியாத மனிதர்கள் பழகும் அணுகுமுறையை விவரிக்கிறது. இவற்றை அறிவுஜீவிகள் கொண்டாடுவதற்கு விடை காண்கிறது.
பாமரன், விழாக்களில் பங்கேற்கும் இயக்குனர்கள், நடிகர் – நடிகையர் என கலைத்தேடலை அறிய வைக்க முயலும் நாவல்.
-– -டி.எஸ்.ராயன்