பெரும் விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு பின், மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் சாதித்த விந்தையை சொல்லும் நுால். உடல் நலிந்த போதும் முயற்சியால் வெற்றி கொண்ட வழிமுறையை உரைக்கிறது.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனுபவ கதை இது. உலகம் முழுதும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றதன் பின்னணி பகிரப்பட்டுள்ளது.
தமிழகம், அண்டை மாநிலங்கள், உலக நாடுகளில் மாரத்தான்களில் பங்கேற்றது படங்களுடன் பதிவாகியுள்ளது. அந்தந்த பகுதியின் சிறப்புகள், வரலாற்று தொன்மை மற்றும் பெருமை தகவல்களும் தரப்பட்டுள்ளன.
வாசிப்பில் கிடைத்த மேற்கோள்கள், கவிதைகள், பொருத்தமான பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. சலிப்பு தட்டாத வாசிப்புக்கு உகந்தது. தன்னம்பிக்கையை வளர்க்கும் நுால்.
– மலர்