ஹிந்தி மொழியை சுலபமாக அறிந்து கற்க உதவும் நுால். எளிய தமிழ் விளக்கங்களுடன் இனிமையாக படிக்க உகந்தது.
எளிய பயிற்சிகள் வழியே ஹிந்தி மொழி சுலபம் என்பதை புரிய வைக்கிறது. புதிய மொழியை கற்க உதவுகிறது. எழுத்து நடைமுறையில் இருந்து துவங்குகிறது. உச்சரிப்பை தமிழில் தருகிறது. தொடர்ந்து சிறு சொற்களை மனதில் பதிய வைக்கும் வகையில் தொகுத்து தருகிறது.
எழுத்துகளை அறிவித்த பின், பாடங்களை பட்டியலிட்டு, வாக்கியங்களை அறிமுகம் செய்கிறது. முதலில் தமிழ் வாக்கியம் தந்து அது ஹிந்தி மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது. உச்சரிப்பு தமிழில் தரப்பட்டுஉள்ளது. இந்த நடைமுறை, முறையாக பயிற்சி பெறும் வகையில் உள்ளது. திட்டமிட்டு புதிய மொழியை கற்பதற்கு உதவும் நுால்.
– ராம்