நல்லொழுக்கத்தின் உருவமாக விளங்கும் ஆஞ்சநேயர் வழிபாடு பற்றி உரைக்கும் நுால். வழிபடும் முறைகளும், ஸ்லோகங்களும் தரப்பட்டுள்ளன.
நற்பண்புகளின் உருவகமாக அனுமனை வர்ணித்து, ராமர் மீதான அசைக்க முடியாத பக்தியையும் முன்மாதிரியான குணத்தையும் எடுத்துக்காட்டுகிறது. அனுமனை வழிபடுவதால், புத்திசாலித்தனம், வலிமை, புகழ், அச்சமின்மை மற்றும் நற்பண்புகளை பெற முடியும் என வலியுறுத்துகிறது.
அனுமன் கோர ராட்சசி வாயில் நுழைவது, அவள் காது வழியாக வெளியேறுவது போன்ற புகழ்பெற்ற சாதனைகளை விவரிக்கிறது. அபாரமான திறன்களை வெளிப்படுத்துகிறது. ஆஞ்சநேயர் போற்றித் திருமாலை, ஸ்லோகங்கள் இடம் பெற்றுள்ளன. அனுமனின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் பக்தர்களுக்கு வழிகாட்டும் நுால்.
– வி.விஷ்வா