தஞ்சை மண்வாசனையுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 15 கதைகள் அணிவகுத்திருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்த சுவையுடன் இருக்கிறது.
தினசரி வாழ்வில் காணக்கிடைக்கும் நிகழ்வுகள் கதை வடிவத்தில் தரப்பட்டிருக்கின்றன. உளவியல் ரீதியாக ஒரு நோயாளி எப்படி திருந்த முடியும் என்பதை, ‘வண்ணமும் வாழ்க்கையும்’ கதையும், கதையோடு முழுமையாக ஒத்துப்போகும் தலைப்பான, ‘தாளுண்ட நீர்’ கதையும் சமூகத்தை பிரதிபலிக்கின்றன.
நிஜ வாழ்வில் நிகழ்ந்த துயர சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட, ‘முதல்மார்க்’ சிறுகதை, கொடிய இரவில் கோர நகங்கள் எதிர்ப்படுவது போல் கூர்மையாக இருக்கிறது. பொது அறிவு, அரசியல் நகைச்சுவையும் இழையோடிக் கொண்டிருக்கிறது.
– ஊஞ்சல் பிரபு