பெண்களின் ஜாதகத்தை வைத்து வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை கூறும் நுால். குடும்பம், சமூகத்தை வடிவமைப்பதில் உள்ள பங்கை வலியுறுத்துகிறது.
ஒரு பெண்ணின் முகத்தோற்றம், குணாதிசயம், பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கணிக்க ஜோதிடம் எவ்வாறு உதவுகிறது என விவாதிக்கிறது. திருமணத்திற்கு முன், ஜாதகங்களைப் பொருத்துவதன் முக்கியத்துவத்தையும் அலசுகிறது.
பெண்களின் பெருமைகள், ஆண்கள் ஜாதகப்படி மனைவி யோகம், திருமண பொருத்தங்கள் பார்க்கும் முறை, பெண்களின் வாழ்க்கை பலன்கள், என, 11 தலைப்பில் இடம்பெற்றுள்ளன. பெண்களின் ஜாதகங்களை அணுகும் வழிகாட்டியாக விளங்குகிறது. ஜோதிடத்தில் ஆர்வமுள்ளோருக்கு உதவும் நுால்.
– வி.விஷ்வா