சிறிய கருத்துக்களைக் கூறி பெரிதாக சிந்திக்க வைக்கும் நுால். திருப்பதியில் மறைந்துள்ள செய்திகள், விஷ்ணு சகஸ்ர-நாம முதல் வரிக்கு முத்தான விளக்கம் தரப்பட்டுள்ளது.
கருட சேவையின் சிறப்பு, தை அமாவாசையின் உயர்வு, திருமாலின் 12 திருநாம பொருள், திருமலையில் பூஜை நேரம் மணி அடிக்காததன் காரணம், பித்ரு வழிபாடு பலன்கள், ஆஞ்சநேயர் வழிபாடு முறை என்று ஆன்மிகச் செய்திகள் உள்ளன.
மனித வாழ்க்கை மேன்மை காண, பணம் பண்ணும் வழி, 100 வயது வாழும் வழி, சுகாதாரக் குறிப்புகள், அன்பின் வலிமை, ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தும் முறை, உழைப்பின் உயர்வு போன்ற தலைப்பில் உள்ளன. யோசிக்க வைக்கும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து