தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நோபல் பரிசை பெற்றுத் தந்த கவிதைகளின் தொகுப்பு. ஆங்கிலம், தமிழாக்கம் செய்த வடிவமும் தரப்பட்டுள்ளது. ஒப்பிட்டு படிக்க வசதியாக இருக்கும் வகையில் பக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
எளிய மொழி நடையில், மூலக்கருத்து சிதையாமல், கவனமுடன் தரப்பட்டுள்ளது. கவிதை நடை தனித்துவமாக மிளிர்கிறது; நெஞ்சுருக வைக்கிறது. தவிக்கும் ஆன்மாவுக்கு ஆறுதல் தருகிறது.
ஏங்கிக் கிடக்கும் மனதை அமைதிப்படுத்தி, ஞானம் பெற தயார் செய்கிறது. எல்லா வகை பதற்றத்தையும் தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. பலவீனம், சோம்பல், அறியாமை, முயற்சியின்மை, மலிந்திருக்கும் எதிர்மறை உணர்வுகளை மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. உலக ரசிகர்களை கவர்ந்த கவிதை நுால்.
– மதி