கிராமத்து வாழ்க்கையை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கல்வி, வேலை போன்றவை புரட்டிப் போட்டாலும், ஆழ்மனதில் அமிழ்ந்து கிடக்கும் மண்வாசனையுடன் தாலாட்டும் தென்றலாய் வருடுவதை உரைக்கிறது.
ராசி இல்லாதவள் என்ற மூடப்பழக்கவழக்கத்தின் முடை நாற்றத்தை தோலுரிக்கிறது, ‘தவம் செய்கிறாள் சித்தி’ என்ற கதை. தடைபட்ட திருமணத்தை நடத்தி வைக்கிறது, ‘கை கொடுக்கும் உறவு’ என்ற கதை.
கைம்மாறு கருதாது செய்த உதவிக்கு நன்றிக்கடன் செலுத்திய நிகழ்வால் நெகிழ வைக்கிறது, ‘அனுமன் அருள்’ என்ற படைப்பு. பொருளியல் ஏற்றத்தாழ்வுகளால் சீர்கெடும் உறவுகளை உணர்வுகளால் ஒன்றுபடுத்தும் மண்வாசனை நிறைந்த நுால்.
– புலவர் சு.மதியழகன்