குறள்களின் பொருளுக்கு ஏற்ப அமைந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருளை நன்கு உணர மிகவும் உதவும்.
குறிப்பறியும் ஆற்றல் உள்ளவன், உலகத்தின் அணிகலன் என்பதை மனைவி பணிக்குச் செல்வதை அவள் முடிவுக்கே விடும் கதை முதலில் உள்ளது. குறிப்பறியும் தன்மை கொண்டவர் தெய்வத்திற்கு சமம். பகையையும், நட்பையும் கண்ணாலேயே உணர முடியும். முகமே ஒருவரின் நெஞ்சத்தைக் காட்டும் கண்ணாடி என்கிறது.
அலுவலகத்தில் பணி செய்ய ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் நிர்வாகி, வினாக்கள் எதுவும் கேட்காமல் உற்று நோக்கிப் பார்த்து அறியும் கதை மிக அருமை.
திருக்குறள் பெருமை உணர்த்தும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து