வள்ளலார் ராமலிங்கரின் இளமை காலம் முதல், மரணமிலாப் பெருவாழ்வு அடைந்த நிலை பற்றி விளக்கும் நுால். பக்தியை விளக்குவதோடு வாழ்வியல் முறைகளையும் கூறுகிறது.
உரையோடு துவங்கி, 42 தலைப்புகளில் வள்ளலார் நெறிகளை தொகுத்துக் கூறுகிறது. சமரச சுத்த சன்மார்க்கம், சத்திய ஞானசபை, அருட்பெருஞ்ஜோதி, அற்றார் அழிபசி தீர்த்தல், மனுமுறை கண்ட வாசகம், ஏழு திரை தத்துவம், அன்னதானம், அருள்நெறி, சுத்த சன்மார்க்க சாதனம் போன்ற தலைப்புகளில் கருத்துகளை வழங்குகிறது.
ஒளி வடிவில் வழிபட வேண்டும். உயிர் பலி கூடாது. சமய வேறுபாடு தவிர்த்து எல்லா உயிரினங்களையும் தன்னுயிர் போல் நினைக்க வேண்டும் போன்ற வாழ்க்கை நெறிகளை விளக்கும் நுால்.
– முனைவர் ரா.நாராயணன்