இஸ்லாம் மதம் பற்றிய இனிய தகவல்கள் கூறும் அருமையான நுால்.
அன்புக்கும், அறிவுக்கும், முரண்பாடும் போராட்டமும் இருப்பதுபோல் தெரியும். வெறும் அன்பு மட்டும் போதாது. அபிமானமும், அடிபணிதலும் வேண்டும். அறிவு வாழ்வைக் குலைக்கும் விபரீதமாய் இருக்கக்கூடாது. அன்பும் அறிவும் கூடி தெய்வீகமாக வேண்டும். இது போன்ற போதனைகளை சொல்கிறது.
செல்வமும் செல்வாக்கும் உடல் நலமும் உள்ளவர் ஆயுளில் மெக்கா, மதினா சென்று காண வேண்டும் என போதிக்கிறது. முஸ்லிம் என்பது எது, முஸ்லிம் என்பது யார் என்பவை போன்ற கேள்விகளுக்கு தக்க விளக்கம் அளிக்கிறது. இஸ்லாம் மதம், நபிகள் நாயகம் பற்றிய விபரங்களை எளிமையாக விளக்கும் நுால்.
– -முனைவர் மா.கி.ரமணன்