மூலிகைகளை பயன்படுத்தி உடல்நலம் பேணுவது குறித்து வழிகாட்டும் நுால். உடல்நலக் கோளாறுகளை சீராக்கும் வழிமுறைகளை கற்றுத் தருகிறது.
தொகுப்பில், 52 கட்டுரைகள் உள்ளன. நோய் வராமல் தடுப்பது, வந்தால் எளிய முறையில் மீளும் வழிமுறைகள் என முறைப்படுத்தி தகவல்களை தருகிறது. வீட்டில் கிடைக்கும் இஞ்சி, செம்பருத்தி, அரசு, மஞ்சணத்தி போன்ற தாவரங்களின் நோய் நீக்கும் பண்புகளை அழகாக விளக்குகிறது.
மூலிகையை உணவு போல் பயன்படுத்துவது, மேற்பூச்சாக உடல் உபாதைகளை தணிப்பது என தாவரங்களின் தன்மைகள் தரப்பட்டுள்ளன. குடும்பத்தில் முதியவர்கள் தரும் ஆலோசனை போல் அமைந்து, உடல் நலன் காக்க உதவுகிறது. நலம் காக்கும் எளிய மருத்துவ அறிவு தரும் நுால்.
– ராம்