பொறியியல் கல்லுாரி பாடத்திட்ட அடிப்படையில் அமைந்த கேள்வி – பதில் பாணியிலான நுால். பழங்காலத்தில் தமிழர் தொழில்நுட்பம் பற்றிய விபரங்களை தருகிறது.
புத்தகம் ஐந்து பாகங்களாக தகவல்களை தருகிறது. முதல் அலகு, நெசவு மற்றும் பானை தொழில்நுட்பம் பற்றிய விபரங்களை எடுத்துரைக்கிறது. அடுத்து, வடிவமைப்பு மற்றும் கட்டட தொழில் நுட்பம் குறித்து, பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உற்பத்தி தொழில்நுட்பம், வேளாண்மை, நீர்ப்பாசன நுட்பம் இறுதியாக அறிவியல் தமிழ் மற்றும் கணினித் தமிழ் பற்றி கூறப்பட்டுள்ளது. எளிமையாக கேள்விகள் அமைத்து, தக்க பதில் தந்துள்ளது. எளிய நடையில் புரியும்படி எழுதப்பட்டுள்ள நுால்.
– மதி