எழுத்தாளர்களுடனான அனுபவங்களை பகிரும் நுால். எழுத்தாளர் புதுமைப்பித்தன் மரண படுக்கையில் நடந்தவற்றை குறிப்பிடுகிறது. கிடைத்த பணம் பற்றி கூறுகிறது.
எழுத்தாளர்கள் தவிர்க்க வேண்டிய வன்மம், பெண்கள் மீதிருந்த போதை பார்வையை, கடிதம் வழியாக சுட்டி காட்டியதை எடுத்துரைக்கிறது. மலம், வாயு போன்ற மையக்கருவுள்ள தலைப்புகள் சிந்திக்க வைக்கின்றன.
திருச்சியின் அடையாளங்கள் மலைக்கோட்டையும், ஜோசப் தேவாலயமும் இருப்பதையும் கூறுகிறது. தாயின் சொலவடைகளில் வாழ்வு எதார்த்தத்தை புரிய வைக்கிறது. கதை, நாவலில் கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்ட சூழலை சொல்கிறது. மனநலம் பாதித்தவர்களின் நடை, விடாத பேச்சில் மறைந்திருக்கும் உண்மையை காட்டுகிறது. மனதில் பட்டதை கூறும் நுால்.
– -டி.எஸ்.ராயன்