முகப்பு » கதைகள் » பொம்மை கல்யாணம்

பொம்மை கல்யாணம்

விலைரூ.50

ஆசிரியர் : வத்சலா சேதுராமன்

வெளியீடு: குங்குமவல்லி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை மையப்படுத்தி சிந்தனையுடன் படைக்கப்பட்டுள்ள குறுநாவல் நுால். விறுவிறுப்பான நடையில் அமைந்துள்ளது.

பெரும்பாலும் உரையாடலாகவே கதை நகர்த்தப்பட்டு உள்ளது. துள்ளலுடன் அமைந்த எளிய சொற்கள் வாசிப்பில் ஆர்வத்தை துாண்டுகிறது. குடும்ப பொறுப்பை சுமந்து வாழும் பெண்ணுக்கு நடக்கும் அதர்மம், மிக அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது. கணவன் மனம் நோகாமல் இருக்க, மாபெரும் உண்மையை சொல்லாமல் மறைக்கிறாள் மனைவி. அதுவே, அவளுக்கு தீங்காகிறது.

மற்றொரு பெண்ணை மணக்கிறார் கணவர். இறுதியில் நீதிமன்றத்துக்கு வழக்கு வருகிறது. உண்மையை உடைத்து, குடும்ப பொறுப்புடன் செயல்பட்டதை சொல்கிறாள் மனைவி. திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை கோர்த்து எழுதப்பட்ட நுால்.

– சிவா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us