கதம்ப மாலை போல் வண்ணமயமாக தொடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நினைவில் பதியும் வகையில் உள்ளன. தொகுப்பில், இடைவெளி, பூக்களே, மனசு போன்ற படைப்புகள் பெண் வாழ்வின் யதார்த்த நிலையை, மின்னல் பாய்வது போல் விவரிக்கின்றன. மன உணர்வுகளை மிக எளிய நடையில் சித்தரிக்கின்றன. படித்ததும் சிந்தனையில் ஆழ்த்துகின்றன.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் மாட்டிக்கொண்டால், அந்த குடும்பம் படும் துயரத்தை ஒரு கதை சொல்கிறது. இதுபோல் ஒவ்வொரு கதையும் வாழ்வு செயல்பாட்டை அலசி, படிப்பினையை தருகின்றன. புலம் பெயர்ந்த தொழிலாளர் பற்றிய கதையும் உள்ளது. நல்ல பாடங்கள் கற்றுத்தரும் விதமாக கதை மாந்தர்கள் உலாவுகின்றனர். சிந்தனையில் பதியும் படைப்புகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
– ராம்