துன்பத்திலிருந்து விடுதலை அடைய ஏங்குவர் மனிதர். அதேசமயம் யோகத்துக்கு வழிமுறையை தெரிந்து கொள்ள துடிப்பர்.
இவற்றுக்கு ஏற்ற மந்திரங்களை, உரிய யந்திரங்களில் உருவேற்றி வணங்கினால் பலன் கிடைக்கும் என்கிறது இந்த நுால்.
சரவண யந்திரம், பத்மலட்சுமி யந்திரம் என்று தெளிவாக படங்களுடன் விளக்குகிறது. துணிவும், வீரமும், வேகமும் ஏற்பட ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ஸ்லோகம் அருமையாக உள்ளது. பாராயணத்துக்கு ஏற்றது.
சிவராத்திரியில் முதல் ஜாமம் பால், இரண்டாம் ஜாமம் தயிர், மூன்றாம் ஜாமம் நெய், நான்காம் ஜாமம் தேன் அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் உள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்