புதிய உத்தியில் எழுதப்பட்ட புதினம். மரபுக்கு வேறுபட்ட மகுடம் சூட்டுகிறது. மலரும் மொட்டையும், முதிர்ந்த மரத்தையும் உரையாடச் செய்து கருத்தை வெளிப்படுத்துகிறது. சுதந்திர தின விழாவை ஆடம்பரமாக கொண்டாட காந்தி விரும்பவில்லை. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியில் வாடும் போது, அதை குற்றமாகவே கருதினார். காந்திஜி கொலை செய்யப்பட்ட போது, ஒரு செய்தி உலகம் முழுக்க பரவலாக்கப் பட்டது.
தன் விருப்பத்தை பல தருணங்களில் கூறி இருந்தாலும் அன்று அவர் சுடப்பட்டபோது ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை. ஊகத்தின் அடிப்படையிலான செய்தி உலகம் முழுக்க பரப்பப்பட்டுவிட்டது. இவ்வாறு மகாத்மா குறித்து சுவையான தகவல்களின் தொகுப்பாக உள்ள நுால்.
–- இளங்கோவன்