குடும்பத் துாணான தந்தையை இழந்த மூத்த மகள், உடன்பிறந்தோரை கரையேற்றும் பொறுப்போடு வாழ்வின் கடினங்களை கடப்பதை சொல்லும் நாவல். எண்ணற்ற இன்ப துன்பங்கள் கலந்த வாழ்வு உண்மைகளை அறிவுறுத்தி, உயர்ந்த கருத்துப் கருவூலமாக நிமிர்ந்து நிற்கிறது.
திருப்பரங்குன்றத்தில் நடப்பதாக வடிவமைக்கப்பட்ட கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், வாசகனையும் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் திறமை பளிச்சிடுகிறது. எளிமையான வாழ்க்கையை வகுத்து, ஏழை எளியவர் துன்பங்களை உணர்ந்து உதவும் கதை நாயகன் பாத்திரம் மனதைக் கவர்கிறது.
சோகங்களுக்குள்ளும் ஒப்பற்ற இலக்கியச்சுவை உள்ளடக்கியதாக கமழுகிறது. ஒரு காவியத்தைப் படித்த உணர்வை தருகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு