ஓவியம், ஓவியர்களின் கைவண்ணத்தைப் பற்றியும் விவரிக்கும் நாவல்.
கண்காட்சிகளில் எந்த மாதிரியான ஓவியங்கள் விரைவில் விற்றுத் தீரும் என அளிக்கப்பட்டுள்ள குறிப்புகள் அருமை. செல்வந்தர்கள், ரசிகர்கள் எப்படி ஓவியங்களை தேர்ந்தெடுக்கின்றனர்; உண்மையிலேயே புரிந்து தான் வாங்குகின்றனரா என்பதற்கு விளக்கம் தருகிறது.
எந்த வகையில் ஓவியங்கள் அமைய வேண்டும் என விளக்கம் உள்ளது. ஓவியர்களுக்கு மாடலாக வரும் பெண்கள், குழந்தைகளோடு சந்திக்கும் இன்னல் குறித்தும் விரிவாகவே உள்ளது. ஓவியங்களை அறிய வழிகாட்டும் நாவல்.
– முகில்குமரன்