கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர் தன் கிராமத்தை மையப்படுத்தி எழுதியுள்ள நுால். கிராம மக்கள் பற்றிய தன் வரலாற்றுச் செய்திகளை நினைவுச்சாளரம் வழியாக எடுத்துரைப்பது சுவாரசியம் தருகிறது. குழந்தைப்பருவம் துவங்கி, வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலம் வரையிலான செய்திகள் ஒன்று விடாமல் கூறப்பட்டுள்ளன. குடும்ப வரலாறு, பயின்ற பள்ளிகள், தனிப்பட்ட குணநலன்கள், அந்த ஊர்மக்களை ஆதரித்து வந்துள்ள தன் பெற்றோரின் கருணை உள்ளம் பற்றிய விபரங்கள் உள்ளன.
வாஞ்சையுடன் நேசித்த இயற்கை, உயிரினங்கள் மீது காட்டிய பரிவு யதார்த்தமான பாணியில் சொல்லப்பட்டுள்ளன. கிராமத்தைச் சுற்றியுள்ள கோவில்கள் பற்றியும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றியுமான செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ள நுால்.
– ராம.குருநாதன்