அயோத்தி ராமர் கோவில் பிரச்னையில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றிய நுால். பா.ஜ., வெள்ளை அறிக்கையின் தமிழாக்கம்.
அந்த இடத்தில் கோவில் இருந்த தொல்பொருள் ஆதாரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இடத்தை மீட்க, அரசு எடுத்த முயற்சிகள் பற்றிய தகவல்கள் உள்ளன. பிரச்னைக்கு தீர்வு காண முயன்றவர்கள், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டோர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
பலமுறை கரசேவை முயற்சி துவங்கப்பட்டு, பேச்சு வார்த்தைகளால் நிறுத்தப்பட்ட விபரங்களை தெரிவிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான கர சேவகர்கள் திரண்டதால் கட்டுப்பாடற்ற சூழல் ஏற்பட்டு, சர்ச்சைக்குரிய கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டதாக குறிப்பிடுகிறது. ஆதாரங்களின் அடிப்படையிலான நுால்.
– டாக்டர் கார்முகிலோன்