பத்து சிறுகதை தொகுப்பு நுால். எழுதியது, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. பறவைக் குடும்பங்கள் இயற்கையை எப்படி பசுமையாக்குகின்றன என்பதை, ‘ஆறாம் அறிவு’ கதை போதிக்கிறது. பகிர்ந்து உண்ணுதலின் அவசியத்தை, முயல் வாயிலாக எடுத்துரைக்கிறது. மணலை களிமண்ணாக மாற்றி, பொம்மை செய்வதை அம்மா, மகள் பாசத்துடன் பிணைக்கிறது.
செம்பருத்தி செடிக்கும், வெட்டுக்கிளிக்கும் உள்ள உறவின் விளைவுகளை எடுத்துரைக்கிறது. விட்டு கொடுத்தலில் கிடைக்கும் வெற்றி மகிழ்ச்சியை, ‘பட்டம் விட ஆசையா’ கதை பகிர்கிறது. சிறுமி எழுதிய கதை நுால்.
– -டி.எஸ்.ராயன்