இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் இரண்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.
காலம் மாற்றம் சிறுகதைகளில் தெரிகிறது; இந்த காலத்துக்கும் பொருந்துகிறது. அலைபேசி இல்லாத குறை தெரிகிறது. பெண்குழந்தை ஒன்றை தத்தெடுக்க விரும்புகிறான் கதாநாயகன். வளர்ப்புத் தாயிடம் விருப்பத்தை வெளியிடுகிறான். சஸ்பென்சாக செல்கிறது.
பனியில் நனைந்த ரோஜா, தான் எழுதும் கதை என்பதை சொல்லாமல் நெஞ்சில் நிறைந்தவள் பற்றி தொடர் எழுதுகிறார். அது பற்றி அந்த பெண் கேட்க, முடிவை தெரிந்து கொள்ளலாம். போன கார் திரும்பி வந்தது; போன உயிர் திரும்பி வந்தது. ஆனால், திரும்பிய காரில் இருந்தவர் நிலை பற்றிய வர்ணனை அற்புதம்.
– சீத்தலைச்சாத்தன்