நாட்டு நடப்புகளை கவிதையாக தந்துள்ள நுால். நோயே இல்லாதவனுக்கு சோதனை எதற்கு, அரசு வழங்கும் மானியம் தேவையா, உயிர் என்றும் அழியாது, கோவில் பாம்பு போல குற்றவாளிகள், பெண்ணியம் பேசும் கவிதைகள் போன்ற தலைப்புகள் உள்ளன.
விபசாரம், வேசித்தனம் வேறுபாடு, ஜபங்களும் நச்சரிக்கும் பிரார்த்தனைகளும் தொல்லைப் படுத்தும் வேண்டுதல்களும் தேவையில்லை, சரணடையுங்கள் சகலத்தையும் கடவுள் தருவான் என்பது போன்ற அறிவுரைகள் உள்ளன.
உலகை ஜெயித்தோர் கூட தன் கஷ்ட காலத்தை ஜெயிக்கவில்லை; பொறுமையே அருமையான வழி, கோபம் தான் சாபத்தின் தந்தை, குட்டுப்படாத வரைக்கும் கட்டுப்பாடு வராது, ஊர்வலம் வீதிக்கு வராமல் இருக்க உபாயம் என பலவற்றை பாடுபொருளாகக் கொண்டுள்ள நுால்.
–- புலவர் சு.மதியழகன்