அட்டகாசமான சாகசத்தை கற்பனை கலந்த புனைவாக விளக்கும் நாவல் நுால். இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன.
கடலில் அமைதியாக மிதக்கும் கப்பல்கள் திடீரென்று தாக்கப்படுகின்றனவாம். என்ன நடக்கிறது என்று யாராலும் அறிய முடியவில்லை. ஒரு பெரிய அபாயம் உலகைத் தாக்குகிறது. கடலுக்கு அடியில் மர்மம் புதையுண்டு கிடக்கிறது. அதை எப்படி, யார் கண்டுபிடிப்பது...
அறிவியல், புவியியல் தகவல்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. கடல் பயண நுட்பங்கள், கப்பல் தொழில்நுட்பம் சார்ந்த கலை களஞ்சியமாக விளங்குகிறது.
கடலுக்கு அடியில் நிகழ்ந்த சாகசங்களை விளக்குகிறது. கடலியல் பற்றி தகவல்களை தெரிவிக்கிறது.
கடலியல் பற்றி தெரிய விரும்புவோருக்கு உதவும் நுால்.
– புலவர் ரா.நாராயணன்