நரிக்குறவர் இன மக்களுடன் தங்கி, பழக்க வழக்கங்களை அறிந்து எழுதப்பட்டுள்ள நுால். பழங்குடியினத்தின் அபூர்வ வாழ்க்கை முறை எளிய நடையில் மறுபதிப்பாக பதிவாகியுள்ளது.
புத்தகத்தில் எட்டு தலைப்புகளில் தகவல்கள் பதிவாகிஉள்ளன. கால்வழிப் பிரிவு, குடிசை வாழ்க்கை முறை, மதமும் தெய்வ வழிபாடும், வாய்மொழி இலக்கியம், மொழி, சமூக அமைப்பு, ஈமச்சடங்குகள் என பகுத்து தகவல்கள் தரப்பட்டுள்ளன. துல்லியமான செய்திகளை முறைப்படுத்தி ஆராய்ந்து தரப்பட்டுள்ளன.
நரிக்குறவர் இன மக்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை துாண்டுவது போல் அமைந்துள்ளது. பழங்குடியினத்தின் இனவரைவியலாக மலர்ந்துள்ளது. நரிக்குறவர் இன மக்கள் மீது உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் படைக்கப்பட்டுள்ள ஆய்வு நுால்.
– மதி