சமூக பிரச்னைகளை மையமாக்கி மிகவும் கவனம் எடுத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உளவியல் ரீதியாக சிந்தித்து பாத்திரங்களை மெருகேற்றி படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொகுப்பில், 14 கதைகள் வித்தியாசமான அணுகுமுறையுடன் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகை பிரச்னையை பேசுகிறது. மிகவும் இயல்பாக கதை சொல்லல் நிகழ்த்தப்பட்டுள்ளது. எளிய நடையுடன், நேரடியாக பேசுவது போல் மிகவும் மென்மையான தொனியில் உள்ளது.
அன்றாட உரையாடல்கள் வழியாக காட்சிகள் கவனத்தை கவர்கின்றன. கதாபாத்திரங்கள் இயல்பான போக்கில் அமைந்துள்ளன. வாசிப்புக்கு தடங்கல் எங்கும் ஏற்படவில்லை. ஒவ்வொரு கதையும் மனதை கவருகின்றன. இயல்புகள் நிறைந்த கதைகளின் தொகுப்பு நுால்.
– மதி