உண்மையும், கற்பனையும் கலந்து பின்னப்பட்டு, பள்ளி பருவ காலத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்.
மேல்நிலைப்பள்ளி காலகட்டத்தில் நிகழும் உளவியல் ரீதியான மாற்றங்களும், அதற்கான தீர்வுகளும் படம் பிடித்தது போல் காட்டுகிறது. வாழ்க்கை பின்னோக்கி நகர்ந்து பள்ளி காலத்திற்கு அழைத்துச் சென்று, பிரியமான நண்பர்களிடம் சேர்க்கிறது.
அன்றைய வாழ்வை அசை போட வைப்பதோடு, திசை மாறி போய் விட்ட யதார்த்தத்தையும் படம் பிடிக்கிறது. சரியான வழிகாட்டல், வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அசை போடச் செய்கிறது. எந்தப் பள்ளியில் வாழ்க்கை திசை மாறியது என்பதையும், அதன் காரணங்களையும் ஞாபகப்படுத்துகிறது. பால்ய காலத்தை அசை போட வைக்கும் சுவாரசியமான நாவல்.
– ஊஞ்சல் பிரபு