வாழ்க்கை அனுபவங்களை மனிதநேய பார்வையுடன் அணுகி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
மகன், மகள் பேரக் குழந்தைகளுடன் வெளிநாட்டில் இருக்க, தனிமையில் வாடும் தாயின் பிறந்த நாள் ஏக்கத்தை, ‘பிம்பம்’ கதை காட்டுகிறது. கார் ஓட்டுனருக்கு சரியான வழிகாட்டிய மாற்றுத்திறனாளியின் கரிசனத்தை, ‘சரியான திருப்பம்’ பகிர்கிறது.
திருமண விருந்து எச்சில் இலைக்கு, நாயும், மனநலம் பாதித்தவரும் பசியுடன் போராடுவதை, ‘பருக்கை’ கதை படம் பிடித்து மனதை நெருட வைக்கிறது.
உடல் பலவீனத்தால் பால் சுரக்காத தாய் குறித்த யதார்த்தத்தை, ‘பால்மணம்’ கூறுகிறது. ஒவ்வொரு கதையும் மனித வாழ்வியலோடு பொருந்துகிறது. எழுத்தில் கவித்துவம் இருப்பது வாசிப்பை சுவாரசியப்படுத்துகிறது.
– டி.எஸ்.ராயன்