வாழ்வில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு போல் தெரிந்தாலும், பின்னணியில் உள்ள ஆன்மிகத் தகவல்களை புறம் தள்ளக்கூடாத அளவில் உள்ள நுால்.
அபிராமி அந்தாதி பாடல்களை தேர்வு செய்து விளக்கத்தை கதை போல சம்பவமாக விவரிக்கும் பாங்கு அருமை. பாடல் மனதில் பதிகிறதோ இல்லையோ, உதாரண சம்பவம் மனதை விட்டு அகலாது. ஆசிரியர் அள்ளித் தெளித்துள்ள ஆன்மிகத் தேன் துளிகள் ஏராளம்.
சில சிதறல்கள்...
* மரணம் என்பது கர்ம பலன்படி நிகழக்கூடியது; அதை உயிரைக் கொடுத்து தடுக்க நினைப்பது முட்டாள் தனம்
* துாய அன்பிற்கு அடிமையாக இருந்தால் தவறுகள் நடக்க வாய்ப்பேயில்லை. இது போல் அபிராமி அந்தாதியைப் பிழிந்து சாரத்தை தரும் நுால்.
– இளங்கோவன்