தமிழக கலாசாரத்தை வெளிப்படுத்தும் சிற்பக்கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று ரீதியாக பகுத்து சிறப்புகளை நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
சிற்பங்கள் என்ற தலைப்பு துவங்கி, மணற்சிற்பங்கள் வரை, 35 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பொருத்தமான பகுதிகளில் போதுமான படங்கள் தரப்பட்டுள்ளன. இவை, சிற்பங்களின் சிறப்பை எளிதாக புரிந்துகொள்ள உதவுகின்றன.
தமிழகத்தில் பல காலகட்டங்களில் மரபுகள் வழியாக சிற்பங்கள் வடித்துள்ளதை விளக்குகிறது. கல், மரம், மணற்சிற்பங்கள் பற்றி தனித்தனியே விவரிக்கிறது. சிற்பக்கலை பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் எடுத்துரைக்கிறது. மனித நாகரிகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காட்டும் வகையிலான அரிய கலை நுால்.
– ராம்